முக்கிய அறிவிப்புகள்

வழிபாட்டுத்தலங்கள் பற்றிய வழக்குகள்! மதச்சார்பின்மையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்!! NTF வரவேற்பு!!!

பத்திரிகை அறிக்கை!

நாள்: 12/12/2024.

*வழிபாட்டுத்தலங்கள் பற்றிய வழக்குகள்*

*மதச்சார்பின்மையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்!*

*தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வரவேற்பு!*

காலங்காலமாக அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவி வந்த இந்தியாவில் இந்துத்துவ பாசிசம் தலை தூக்கியதில் இருந்து நமது நாட்டின் நிலை முற்றிலும் கலவர மயமாகி விட்டது.

இந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒவ்வொரு செயலும் மதச்சார்பின்மையை கேள்விக்குறியதாகவும், அரசியல் சாசனத்தைக் கேலிக்குரியதாகவும் ஆக்கி விட்டது.

இதனைத் தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்ட அரசுகளும், அரசியல் சாசனத்தின் மாண்பை முன்னிறுத்தி, நீதியை நிலைநாட்டி அமைதியை மீட்டெடுக்க வேண்டிய நீதிபரிபாலன அமைப்புகளும் பல சந்தர்பங்களில் தமது கடமையில் இருந்து தவறியதால் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அரசு இயந்திரத்தின் கையாலாகாத தனத்தால் பாசிச சக்திகள் சட்டத்தைத் காலில் போட்டு மிதித்து பயங்கரவாதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகள் உரிய பரிகாரமும், பாதுகாப்பும் கிடைக்காமல் பரிதவிப்பதும் தொடர்ந்தது.

இத்தகைய இக்கட்டான சூழலில் அபூர்வமாக சில நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும் வகையில் அமைவது உண்டு.

அதுபோன்ற ஒரு அருமையான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்போது வழங்கி மதச்சார்பற்ற மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பாபரி மஸ்ஜித் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்த போது அப்போதிருந்த நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு "வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் 1991" என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

அதில், "பாபரி மஸ்ஜிதை ஒரு விதிவிலக்காகத் தவிர்த்து விட்டு, இனி இந்தியாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் 1947-ல் தேசம் சுதந்திரம் அடைந்தபோது யாருடைய கைவசம் இருந்ததோ அந்நிலையே தொடர வேண்டும். அச்சட்டத்தின் பிரிவு 3-ன் படி ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்ற மதத்தின் வழிபாட்டுத்தலமாக மாற்றவோ, ஒரு மதத்தில் உள்ள ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்ற பிரிவின் வழிபாட்டுத்தலமாக மாற்றவோ தடை. பிரிவு 4(2)-ன் படி மத வழிபாட்டுத்தலங்களின் தற்போதைய நிலையை மாற்றக் கோரும் அனைத்து வழக்குகள், மேல் முறையீடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படும். வழிபாட்டுத்தலங்கள் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்த அதே நிலையில் இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு வழிபாட்டுத்தலத்தின் மதத் தன்மையை மாற்றினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்", என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், சட்டத்தை மீறுவதையே எப்போதும் வழக்கமாக வைத்திருக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் ஞான் வாபி மஸ்ஜித் முதல் சமீபத்திய சம்பல் பகுதி ஷாஜி ஜுமுஆ மஸ்ஜித் வரை பல்வேறு பள்ளிவாசல்களை அபகரிக்கும் நோக்கத்தோடு வழக்கு, கலவரம் என பிரச்சினைக்கு மேல் பிரச்சினை செய்து வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் பள்ளிவாசல்களை கோயில்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற வழக்குகளை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக நீதிமன்றங்களும் இந்த அநீதிக்கு துணை போயின.

அதுமட்டும் இன்றி, "வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் 1991"ஐயே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்துத்துவ சக்திகளால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில்தான் தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அருமையான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

🎯பள்ளிவாசல் போன்ற பிற மத வழிபாட்டுத் தலங்களை கோயில்களாக மாற்ற வேண்டும் எனக் கோரி தொடுக்கப்படும் எந்த வழக்குகளையும் எந்த இடத்திலும், எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது.

🎯அத்தகைய கோரிக்கை தொடர்பாக தற்போது நிலுவையில் உள்ள எந்த வழக்கிலும், உச்சநீதி மன்றம் "வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் 1991" குறித்த பிரதான வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரையில் தீர்ப்பு வழங்கக் கூடாது.

🎯கோயில்களை இடித்து அல்லது கோயில்களுக்கு மேல் கட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்படும் புகார்களை ஏற்று பள்ளிவாசல்களை சர்வே செய்யும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

*சமயச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனத்தின் மாண்பை நிலைநாடும் விதமாக இதுபோன்று மூன்று பிரதான அம்சங்களோடு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வரவேற்கிறது.*

குறிப்பாக, ஞான்வாபி மஸ்ஜிதை கோயிலாக மாற்ற வேண்டும் என இந்துத்துவ சக்திகள் வழக்குத் தொடுத்த போது, "வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் 1991"-ன் அடிப்படையில் அந்த வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது; எனவே, அதனைத் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்திட வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பு எதிர்வாதம் வைத்த போது, அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஞான்வாபி மஸ்ஜித் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று குறுகிய மனப்பான்மையோடு குதர்க்க வாதம் பேசி அதை அனுமதித்தது அப்போதைய நீதிபதி சந்திரசூட் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற வேண்டியுள்ளது.

சந்திரசூட் போன்ற (அ)நீதிபதி அமர்ந்திருந்த இடத்தில் சஞ்சீவ் கண்ணா போன்ற நீதியை நிலைநாட்டும் துணிச்சலான தலைமை நீதிபதி அமர்ந்திருப்பது வரவேற்கத் தகுந்தது.

*மதவெறி சக்திகளின் சதிகளுக்கு மரண அடி கொடுத்து, மதச்சார்பற்ற மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள உச்சநீதிமன்றத்தை உளமாறப் பாராட்டுவதோடு, இதே உறுதியுடன் இறுதித் தீர்ப்பையும் வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது.*

இவண்,
பொறையார் அலி அஹமது,
செய்தித் தொடர்பாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)


No comments