கலவரத்தைத் தூண்டும் (அ)நீதிபதி - களை எடுக்குமா உச்சநீதி மன்றம்?!
பத்திரிகை அறிக்கை:
நாள் 09/12/2024.
கலவரத்தைத் தூண்டும் (அ)நீதிபதி - களை எடுக்குமா உச்சநீதி மன்றம்?!
பொதுவாக நமது நாட்டில் சாமானியர்கள் மதத்துவேஷம் இன்றி அனைத்து சமுதாய மக்களும் இணக்கமாகவே பன்னெடுங்காலம் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறான சமூக நல்லிணக்கம் தொடர்ந்தால் அரசியல் அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்ற தமது நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை உணர்ந்த காவி வெறிக்கும்பல் ஆர்எஸ்எஸ்-ன் தலைமையிலும், வழிகாட்டலிலும் பல்வேறு பெயர்களில் இயங்கும் காலிப்படைகளை களம் இறக்கியுள்ளது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என எண்ணற்ற பயங்கரவாதச் செயல்களில் இந்த காவி கொலைகாரர்கள் இவற்றில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்பது ஷிண்டே எனும் முன்னாள் ஆர்எஸ்எஸ்-காரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் நிரூபணமானது.
மேலும் அரசின் அனுமதி மற்றும் அனுசரணையோடு மேடைபோட்டு வெறிப்பேச்சு மூலம் அமைதியாக இருக்கும் நாட்டின் நிம்மதியைக் குலைத்து, பதட்டத்தை ஏற்படுத்தி சாமானியன் கையிலும் சூலாயுதத்தை வழங்கி பெரும்பான்மை சமூகத்தில் கணிசமானோரை மூளைச்சலவை செய்து சிறுபான்மை மக்களுக்கு நேர் எதிரியாக கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.
இதன் விளைவாக பொதுமக்கள் மட்டுமின்றி, அதிகாரம் படைத்த உயர் பதவி வகிப்போரிலும், எளிய மக்களின் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பு மிக்க காவல்துறை, நீதித்துறை போன்ற உச்ச அதிகாரம் பெற்றோரிலும் பலர் பாசிச சக்திகளுக்குப் பலியாகி தங்களுடைய மூளையில் முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தை ஏற்றிய விஷமிகளாக இருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.
அது போன்ற ஒரு விஷமியாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் இருப்பதை சமீபத்தில் VHP என்னும் இந்துத்துவ பயங்கரவாதக் கும்பலின் கூட்டத்தில் அவர் பேசியுள்ள பேச்சு அம்பலப்படுத்தி உள்ளது.
தாம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமநீதி வழங்க வேண்டிய பொதுவான நீதிபதி என்பதை மறந்து பல கலவரங்களில் தொடர்புடைய VHP போன்ற ஒரு பயங்கரவாதக் கும்பலின் கூட்டத்தில் கலந்து கொண்ட குற்றத்தை செய்தது மட்டுமல்லாமல், "இந்த இந்துஸ்தான் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே, அவர்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். (முஸ்லிம்களாகிய) கத்முல்லாக்கள் நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்கள், தேசத்திற்கு விரோதமானவர்கள், பொதுமக்களைத் தூண்டி விடுபவர்கள். நாடு முன்னேறுவதை விரும்பாத (முஸ்லிம்களாகிய) அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றெல்லாம் அப்பட்டமான அவதூறையும், உச்சபட்ச மதவெறுப்பையும் அள்ளி வீசி இருக்கிறார்.
ஒரு மதவெறிக் கட்சியின் நாலாந்தர பேச்சாளரை விடவும் கேவலமாகப் பேசி அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள கௌரவரமான பதவியை இழிபடுத்தும் விதமாக ஒரு அப்பட்டமான மதவெறியனாக நடந்து கொண்டிருக்கும் சேகர் குமார் யாதவை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிக்கிறது.
இது போன்ற வன்முறைப் பேச்சுக்கள் நாடெங்கும் கலவரத்தைத் தூண்டும் அளவு அதிபயங்கரமானது என்ற தீவிரத்தை உணர்ந்து உச்சநீதி மன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்.
பொதுமக்களில் யாராவது இது போன்று மதத் துவேஷமாகப் பேசினால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நல்லிணக்கத்தை விரும்பும் மக்கள் நீதிமன்றத்தை அணுகுவது வழக்கம். ஆனால், இங்கு *நீதிபதியே ஒரு கலவரப் பேர்வழியாக இருப்பது நாட்டிற்கே பேராபத்து என்பதை உணர்ந்து உடனடியாக சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்* எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
No comments