NTF சார்பாக நடைபெற்று வரும் தென் மாவட்ட பெருமழை, வெள்ளப் பேரிடர் நிவாரணப் பணி குறித்த செய்தி அறிக்கை!
ஏக இறைவனின் திருப்பெயரால்... 21/12/2023
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக நடைபெற்று வரும் தென் மாவட்ட பெருமழை,வெள்ளப் பேரிடர் நிவாரணப் பணி குறித்த (டிச.21) செய்தி அறிக்கை:
தூத்துக்குடி:
NTF சார்பாக தூத்துக்குடி, S.S. மாணிக்கம் நகரில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டது.
இம் முகாமில் நிவாரணப் பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக் கொண்டு, அதிக அளவில் பாதிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளைத் தேடிச் சென்று நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, சுமார் 1.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், தேயிலை, சீனி, டூத் பேஸ்ட், டூத் பிரஷ், எண்ணெய், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பிரட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, நாஃப்கின், போர்வை உள்ளிட்ட 22 வகையான
பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தொண்டியிலிருந்து லாரி மூலம், தூத்துக்குடி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றை 500 குடும்பங்களுக்கு பகிர்ந்து பேக்கிங் செய்யப்பட்டது.
பெருமழை வெள்ளப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, அம்பேத்கார் நகர் மக்களை தேடிச் சென்று, முதற்கட்டமாக இன்று (டிச.21) நிவாரண பைகள் 200 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
NTF துணைப் பொதுச் செயலாளர் Dr.செய்யது அபுதாஹிர் மேற்பார்வையில், மாநிலச் செயலாளர் முஹம்மது ஃபரூஸ் தலைமையில், தூத்துக்குடி தவ்ஹீத் பேரவை பொறுப்பாளர் முஹம்மது, தொண்டி தவ்ஹீத் பேரவை தலைவர்
முஹம்மது அஸ்வர், தொண்டி செயல் வீரர்கள் உவைசுல் கர்ணி,
அஜ்மல் கான்,
சிராஜ் முஹம்மது,
சபீர் ரஹ்மான்,
அலாவுதீன்,
ஷேக் அப்துல்லாஹ் மற்றும்
தூத்துக்குடி பேரவை செயல் வீரர்கள் ஜமாலுதீன், ஜாகிர் உசேன் மற்றும் நவாஸ் ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு இன்றைய நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்தார்கள்.
காயல்பட்டிணம்:
NTF மற்றும் புதுச்சேரி, சுல்தான்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை இணைந்து காயல்பட்டினத்தில் முதற்கட்ட நிவாரண உதவிப் பணிகள் நடைபெற்றது.
காயல்பட்டிணத்தில் கடுமையான வெள்ள சேதங்களை சந்தித்த, விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளான, காட்டு தைக்கால் தெரு, சிவன் கோயில் தெரு, அக்பர்ஷா தெருக்களுக்குச் சென்று 100 குடும்பங்களுக்கு தலா 2 கிலோ அரிசி, பெட்சீட்,கைலி
மில்க் பிகிஸ் பிஸ்கட் 2 பாக்கெட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.
வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிப் போன எங்கள் பகுதிக்கு, இதுவரை யாருமே நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து தரவில்லை. நீங்கள்தான் முதலில் நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து தருகிறீர்கள் என்று அங்குள்ளவர்கள் பெரிதும் வரவேற்றனர்.
அந்தப் பகுதிக்கு இதைப் போல் இன்னும் பல மடங்கு உதவி தேவைப்படுகிறது.
குறிப்பாக பாய், தலையணை, போர்வை, டவல், உடைகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பேஸ்ட், பிரஸ், நாஃப்கின் போன்ற பொருட்கள் இப்பகுதிக்கு அதிகம் தேவைப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட NTF தலைவர் தக்கலை அபுல்ஹசன் தலைமையில், அம்மாவட்ட துணைத் தலைவர் செய்யதலி, துணைச் செயலாளர் ஃபைசல், மருத்துவ அணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காயல் ஹசனார் லெப்பை, காயல்பட்டிணம் தவ்ஹீத் பேரவை நிர்வாகிகள்
ஜாபர் சாதிக், அப்துல் பாசித், இத்ரீஸ், அபுதாஹிர், அம்மார் மற்றும் பாண்டிச்சேரி சகோதரர்கள் ஜஹபர் சாதிக், அபூபக்கர் சித்தீக், அசாருதீன், ரியாஸ் ஆகியோர் காயல்பட்டிணத்தில் முகாமிட்டு இன்றைய நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
தகவல்:
பேரிடர் மீட்பு & நிவாரணக் குழு
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments