ராம நவமி இந்துக்களுக்கான கொண்டாட்டமா? முஸ்லிம்களுக்கான கொலைக் களமா? NTF கடும் எச்சரிக்கை!
பத்திரிகை அறிக்கை:
01/04/2023.
ராம நவமி
இந்துக்களுக்கான கொண்டாட்டமா?
முஸ்லிம்களுக்கான கொலைக் களமா?
மதப் பண்டிகை ஒவ்வொன்றையும்,
மதக்கலவர நாளாக மாற்றும் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு NTF கடும் எச்சரிக்கை!
வட மாநிலங்களில் பரவலாகக் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று ராம நவமி. பொதுவாக நவராத்திரியின் ஒன்பது நாள் பண்டிகையில் ராம நவமியில் விரதம் இருத்தல், பஜனைகள், கீர்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகள் போன்றவை நடப்பதுண்டு. சில இடங்களில் இராமாயணக் கதாபாத்திரங்களைக் கொண்டு ரத ஊர்வலங்கள் நடப்பதுண்டு.
அவரவருடைய மதப் பண்டிகையை அவரவர் அமைதியாக அனுசரித்த காலம் மாறி, தற்போதைய ஒன்றிய ஆளும் கட்சியான பாசிச பாஜகவின் ஆதரவினாலும், ஆர்எஸ்எஸ் சங்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலினாலும் தற்போது ராம நவமி ஊர்வலங்களை காரணமாக வைத்து ஒவ்வோர் ஆண்டும் அனாவசியமாக முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக ஆபாசமான, ஆட்சேபகரமான கோஷங்களை முழங்கி வம்பு இழுப்பது, பள்ளிவாசல்களைத் தாக்குவது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடு, கடைகள், வாகனங்களை உடைப்பது, தீயிட்டு எரிப்பது, முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது என்பது வாடிக்கை ஆகி வருகிறது.
இப்போதெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் இப்படியான கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்ற போதிலும் இதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ போதிய ஏற்பாடுகளை அரசும், காவல்துறையும் செய்யத் தவறி வருகின்றன.
பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த அரசுகளின் ஒத்துழைப்போடும், எதிர்கட்சிகள் ஆளும் பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நேரடியான ஆதரவோடும் இந்த ராம நவமி கலவரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
தற்போது நடந்துள்ள ராம நவமி ஊர்வலங்களை ஒட்டி மேற்கு வங்காளத்தில் ஹவுரா-காஜிபாரா, மஹாராஷ்ட்ராவில் மும்பை-மல்வானி மற்றும் அவுரங்காபாத், குஜராத்தில் வடோதரா-ஃபதேபுரா, கர்நாடகாவில் ஹஸன் மாவட்டம் என பல பகுதிகளில் திட்டமிட்டு ஊர்வலத்தில் ஊடுருவிருந்த கலவரக்காரர்கள் முஸ்லிம்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
குறிப்பாக, மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மே.வங்கம் ஹவுராவில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் துப்பாக்கி ஏந்திய இந்துத்துவ பயங்கரவாதிகள் கலந்து கொண்டதையும், வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சங்பரிவார கும்பலைப் பயன்படுத்தி கலவரம் நடத்தப்பட்டதையும், முஸ்லிம்களின் உடமைகள் மட்டுமல்லாமல் காவல்துறையின் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டதையும் வீடியோ ஆதாரத்தோடு அம்மாநில முதல்வரே அம்பலப்படுத்தியுள்ளார்.
தமது பண்டிகைகளின் போது யாருக்கும் எவ்விதத்திலும் இடைஞ்சல் தராத முஸ்லிம்களின் மீது, குறிப்பாக தற்போது புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து வணக்க வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள இந்துத்துவ பயங்கரவாதிகளை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாகக் கண்டிப்பதோடு, மீண்டும், மீண்டும் முஸ்லிம்களை வம்பிழுக்க வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கிறது.
கலவரம் நடந்த பாஜக ஆளும் மாநிலங்களில் அங்குள்ள காவல்துறை கலவரக்காரர்களுக்கு துணை போனதோடு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருந்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
இனி வரும்காலங்களில், வன்முறையில் ஈடுபடுவோரை பாரபட்சம் இன்றி ஒடுக்கி சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, நாட்டில் அமைதியும், மத நல்லிணக்கமும் தொடர தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஏற்கனவே, பக்திப்பூர்வமாக இந்து பக்தர்கள் நடத்தி வந்த விநாயகர் சதுர்த்தியை முழுக்க, முழுக்க கலவர நாளாக மாற்றி நாடெங்கும் பதற்றத்தை உண்டாக்கி விட்டதைப் போலவே, இந்த சங்பரிவாரக் கும்பல் ராம நவமி நாளையும் இரத்தக் களரி நாளாக மாற்றி சாமானிய இந்துக்கள் அனைவருக்கும் களங்கம் சுமத்த எத்தனிக்கிறது.
எனவே, இந்து மதத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் 'உங்களுடைய மதத்தின் பெயரைச் சொல்லி, உங்களுடைய கடவுள்களின் பெயரால் கலவரங்களை நடத்தி அப்பாவிகளின் இரத்தத்தை ஓட்டி, அதைத் தங்களுடைய சுயநலத்திற்காகவும், அற்ப அரசியல் லாபத்திற்காகவும் பயன்படுத்தும் இந்த சங்பரிவார ஈனப் பிறவிகளை அடையாளம் கண்டு, அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்', என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அன்போடு கேட்டுக் கொள்கிறது.
இவண்,
A.S. அலாவுதீன்,
பொதுச்செயலாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).
No comments