முக்கிய அறிவிப்புகள்

முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொலை! பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் வெறிச்செயல்!! NTF கடும் கண்டனம்!!!

18/02/2023

பத்திரிகை அறிக்கை

முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொலை!

பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் வெறிச்செயல்!!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!

NTF பொதுச்செயலாளர் அறிக்கை:  

ஹரியானா மாநில எல்லையை ஒட்டியுள்ள, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கட்மீகா கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத் (35 வயது) , நஸீர் (25 வயது) ஆகிய இரு முஸ்லிம் இளைஞர்களும் கடந்த புதன்கிழமை 15/2/23 அன்று பொலிரோ வாகனத்தில் பயணம் செய்யும் வழியில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது,  மோனு மனேசர் என்பவனுடைய தலைமையில் திடீரென அங்கே வந்த 8-10 பேர் அடங்கிய பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பல் அவ்விரு இளைஞர்களையும் காரணமின்றி  கடுமையாகத் தாக்கி, அந்த இளைஞர்கள் வந்த வாகனத்திலேயே கடத்திச் சென்று,  ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் பர்வாஸ் கிராமத்திற்கு கொண்டு சென்று காருக்குள்ளேயே வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் வியாழக்கிழமை 16/2/23 அன்று காருக்குள் எரிந்து கருகிய நிலையில் அவர்களுடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.       

கொலைக் கும்பலின் தலைவனான மோனு மனேசர் என்பவன் ஹரியானா மாநில பஜ்ரங்தள பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், பசு பாதுகாவலன் என்ற போர்வையில் இவன் ஏற்கனவே ஏராளமான முஸ்லிம்களைக் கொன்றொழித்த கொடுங் கொலைக் குற்றவாளி என்றும் தெரிய வருகிறது. 

மேலும், முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று அப்பட்டமாக மதவெறியையும், வன்முறையையும் தூண்டக் கூடிய பதிவுகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருபவன்.        

இத்தகைய இந்துத்துவ பயங்கரவாதி மீது இதுவரை பாஜக ஆளும் ஹரியானா மாநில  காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவனை ஊக்கப்படுத்தும் விதமாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் பாஜக அரசுகள் தன்னைக் காப்பாற்றும் என்ற தைரியத்தில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த   இந்த இரு முஸ்லிம் இளைஞர்களையும் கடத்தி வந்து எரித்துக் கொலை செய்திருக்கிறான்.          

மனிதாபிமானமுள்ள எவரையும் பதைபதைக்க வைக்கும் இந்தக் கொடூரம் நடந்த பிறகும் கூட காவல்துறை

மோனு மனேசர், லோகேஷ் சிங்க்லா, ரிங்கு சைனி, அனில்,  ஸ்ரீகாந்த் என்ற 5 பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் மீது   இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யாமல், பெயரளவுக்கு 

IPC 143- சட்ட விரோதமாகக் கூடுதல்,

IPC 365- ஆள் கடத்தல்,

IPC 367- கடும் காயம் விளைவிப்பதற்காக கடத்துதல்,

IPC 368- முறையின்றி தடுத்து வைத்தல்

ஆகிய பிரிவுகளை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.        

விலங்கினங்களின் பெயரால் மனிதாபிமானம் இன்றி  முஸ்லிம்களை பகிரங்கமாக கொலை செய்வதும், அதை சமூக ஊடகங்களில் துணிச்சலாக வெளியிடுவதும் தற்போதைய பாசிச பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே வட மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றது.       

ஆட்சியாளர்களின் அனுசரணையும், காவல்துறையின் ஆதரவும் இன்றி இதுபோன்ற கொடுஞ்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் துணிவு எவருக்கும் வராது.         

எனவே, மதவெறியை ஊதி வளர்க்கும் பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற பச்சைப் படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதிகளின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, மரண தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசையும், காவல்துறையையும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments