முக்கிய அறிவிப்புகள்

சிறுபான்மை கல்வி உதவித்தொகை பறிப்பு! NTF கடும் கண்டனம்!

29/11/2022

பத்திரிகை அறிக்கை

சிறுபான்மை கல்வி உதவித்தொகை பறிப்பு!

முஸ்லிம்கள் மீதான

ஒன்றிய பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு!!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கடும் கண்டனம்!!!

NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:

இந்தியாவில் மற்ற எந்த சமூகங்களை விடவும், முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி இருப்பது, எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.

ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டிகளின் அறிக்கைகளுக்குப் பிறகு, சிறுபான்மை முஸ்லிம்களை ஓரளவுக்காவது கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, 2006 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது.

1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரை, ப்ரி மெட்ரிக் (Pre Metric), போஸ்ட் மெட்ரிக் (Post Metric) என வகைப்படுத்தி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ப்ரி மெட்ரிக் பட்டியலிலும், 9ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி  படிப்பு வரை போஸ்ட் மெட்ரிக் பட்டியலிலும் உள்ளடக்கி, கல்வி உதவித்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. 

இத்திட்டத்தின் கீழ், சோ்க்கை கட்டணம், டியூசன் கட்டணம், பராமாிப்பு கட்டணங்கள் போன்றவற்றில் சிறுபான்மை சமூகங்களின் மாணவர்களுக்கு சலுகைகள் கிடைத்து வந்தது.  

சிறுபான்மை முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறிவிடக் கூடாது; அவர்கள் கல்வியில் முன்னேறினால், வேலை வாய்ப்புகளைப் பெற்று, அவர்கள் வாழ்வியல் முன்னேற்றம் அடைந்து விடுவார்கள் என்பதற்காக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவர்களை தினக்கூலிகளாகவும், நடைபாதை மற்றும் தள்ளுவண்டி குறு வியாபாரிகளாகவும், சாம்பிராணி புகைபோட்டு வயிற்றைக் கழுபவர்களாகவும் அடித்தட்டு வர்க்கமாகவே அவர்களை வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை ரத்து செய்துள்ளது.

நேற்று, ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ள சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை பறிப்புக்கான அறிவிப்பு, முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். சிறுபான்மையினா் கல்வி உரிமையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்.

மோடி அரசு பொறுப்பேற்றது முதல், சிறுபான்மையினாின் உாிமை பறிப்பு என்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன் நீட்சிதான் சிறுபான்மை மாணவா்களின் கல்வி உதவித்தொகை பறிப்பு.

மோடி அரசின் இந்த ஈனச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

சிறுபான்மையினரின் கல்வி உரிமையை படுகுழியில் தள்ளும் இந்த அறிவிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பா.ஜ.க. அல்லாத மற்ற அனைத்துக் கட்சிகளும், மதச்சார்பின்மை, சமூகநீதியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து அமைப்புகளும், தலைவர்களும் இந்த அநியாயத்திற்கு எதிராக கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச் செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments