முரசொலிக்கு தினமலர் ஆக ஆசையா? NTF கேள்வி…!
12/10/2023
பத்திரிகை அறிக்கை
முரசொலிக்கு தினமலர் ஆக ஆசையா?
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி…!
NTF பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:
தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் ஹமாஸ் - இஸ்ரேல் படைகளின் பரஸ்பர தாக்குதல் உலகின் கவனத்தை ஈர்த்து வருவதை அனைவரும் அறிவோம்.
இதுபற்றிய செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் தங்களின் கொள்கை சார்ந்து, "இஸ்ரேலின் பயங்கரவாத இராணுவ நடவடிக்கை" என்றும், "ஹமாஸின் பயங்கரவாதச் செயல்" என்றும் மாறுபட்ட தொனியில் சார்புத் தன்மையை வெளிப்படுத்தி வருகின்றன.
மேற்கத்திய சியோனிச ஆதரவு ஊடகங்களோ, இந்தியாவிலுள்ள சங்கி சார்பு ஊடகங்களோ, பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வீரர்களை, "தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்" என்று அடைமொழி இடுவதில் ஆச்சர்யம் இல்லை.
ஆனால் தமிழ் பத்திரிகை உலகில் பத்திரிகை தர்மத்தை மதிப்பதாக கருதப்படும், திராவிடத்தின் தூணாக - சமூகநீதியின் அடையாளமாக மதிக்கப்படும் முரசொலியின் நேற்றைய (அக்.11) இதழில், "இஸ்ரேல் மீது பயங்கரவாதிகள் தாக்குல் - 1600 பேர் பலி" என்ற தலைப்பைப் பார்த்ததும், முரசொலி மீது தமிழ் மக்கள் வைத்திருந்த மதிப்பும், நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது.
அந்தத் தலைப்பைப் பார்த்ததும் முரசொலி பத்திரிகை படிக்கிறோமா? அல்லது தினமலர் பத்திரிகை படிக்கிறோமா? என்று ஒரு கனம் தலையே சுற்றி விட்டது.
காந்திஜி, ஜவஹர்லால் நேரு, பெரியார், அண்ணா மற்றும் முரசொலியை நிறுவிய கலைஞர் போன்ற தலைவர்கள், இஸ்ரேல் குறித்தும், பாலஸ்தீனம் குறித்தும் கொண்டிருந்த கருத்திற்கு முற்றிலும் முரணாக இந்தத் தலைப்பு உள்ளது என்பது தற்போதைய முரசொலி ஆசிரியருக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது தினமலர் ஆசிரியரைப் போல தவறான எண்ணத்தை வாசகர்கள் உள்ளத்தில் விதைக்க முயல்கிறாரா? என்ற கேள்வியை பலருக்கும் எழுப்பியுள்ளது.
தவறுதலாக இது நடந்திருந்தால், அதற்கான வருத்தத்தை உடனே முரசொலி வெளியிட வேண்டும்.
இவண்,
ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச் செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
No comments