நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் இந்த சங்கைமிகு திருநாளில்… (10-07-2022)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் இந்த சங்கைமிகு திருநாளில்…
அனைவரும் நலமுடன், வளமுடன் இறைவனின் அருள் பெற்றவர்களாக…
ஈமானிய வலிமை, இறையச்சம் மேலோங்கியவர்களாக… திகழ்ந்திட துஆ செய்கிறேன்.
தியாகம்,பொறுமை, சகிப்புத்தன்மை, பிறர் நலனில் அக்கறை, மனிதநேயம், நல்லிணக்கம் போன்ற நற்பண்புகள் மேலோங்கிட இறைவன் அருள்வானாக!
ஓரிறைக்கொள்கையை நிலைநாட்ட உறுதி குலையாமல் எதிரிகளின் நெருப்புக் குண்டத்தையும் சந்தித்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிவும்…
இறைக்கட்டளையை நிறைவேற்றுவதில் இம்மியளவும் குறைவைக்காமல் ஈன்ற மகனையே பலியிடத் துணிந்து, இறையச்சத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய இப்ராஹீம் நபியின் தியாகமும்…
இறுதிநாள் வரை உலக மாந்தர் எண்ணிப்பார்க்கச் செய்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!
இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் இந்த நன்னாளில் அவர்கள் நிலை நாட்டிய ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு என்ற உறுதியை மேலும் வலிமையாக்கிடுவோம்.
அன்புடன்,
ஏ.எஸ்.அலாவுதீன்
No comments