முக்கிய அறிவிப்புகள்

முஸ்லிம் சமுதாயத்திற்கு NTFன் வேண்டுகோள்!

26/06/2022

முஸ்லிம் சமுதாயத்திற்கு NTFன் வேண்டுகோள்!

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

நாம் உயிரினும் மேலாக மதிக்கும் நபி(ஸல்) அவர்களைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் பாசிச இந்துத்துவ வெறியர்கள் அவதூறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் எழுதியும் பேசியும், முஸ்லிம்களை வம்புக்கிழுக்கும் போக்கு தொடர் கதையாகி வருகிறது.

பா.ஜ.க.தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவள் பற்ற வைத்த மதவெறி நெருப்பு உலகையே உலுக்கிய நிலையில், அவளைத் தொடர்ந்து அவளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஏராளமான சங்கிகள் அந்த தீயில் மேலும் எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்டு எரியச் செய்யும் போக்கை கையாண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு கட்டம் தான் மூத்த சங்கியான RBVS மணியன் என்பவன் முஸ்லிம்களை சீண்டி சமூக ஊடகங்களில் மதவெறியை தூண்டி பேசியுள்ளான்.

இப்படியே இவர்கள் நம்மை தொடர்ந்து இழிவுபடுத்துவதை நமக்குள் பரப்பிக்கொண்டு ஆதங்கத்தை வெளிப்படுத்துவது ஒரு போதும் தீர்வைத் தராது. பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அவர்கள் பதிவின் ரேட்டிங் அதிகரித்து அவர்களுக்கு பலன் அளிப்பதாகத் தான் அமையும்.

நபி(ஸல்) குறித்தும், இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்களை பற்றியும் இவர்கள் பரப்பும் அவதூறுகள் குறித்து எதிர் நடவடிக்கையில் ஈடுபடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

அதற்கான சரியான வழி-அந்தப் பேச்சுக்களை அல்லது எழுத்துக்களை நாம் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அந்த ஆதாரத்துடன் அவர்கள் மீது ஒவ்வொருவரும் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் மனுக்களை கொடுக்க வேண்டும். அதன் நகலை தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பவேண்டும்.

நாம் கொடுக்கும் புகார் மனுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் மாநில அரசின் காவல்துறை வெறி பிடித்த சங்கிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும்.

வெறுமனே அறிக்கை மட்டும் விடுவதாலோ அல்லது 50,100 பேர் ஆங்காங்கே கூடி கத்தி விட்டு கலைவதாலோ ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை கடந்தகால அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே துவக்கமாக RBVS மணியனின் வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து, அவன் மீது தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மேலே குறிப்பிட்டதைப் போல தங்கள் பகுதி காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகாரளித்து, அதற்கான ரசீதைப் பெற்று, ரசீதையும் அதன் நகலையும் இணைத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு புகார் கடிதம் அஞ்சல் மூலமாவோ அல்லது மின்னஞ்சல் (Email) மூலமாகவோ அனுப்புவதற்கு முன் வரவும்.

கூடி கலைவதைவிட, ஒவ்வொரு அவதூறு பதிவுக்கும் லட்சக்கணக்கான புகார்கள் குவியும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்றாக வேண்டும் என்ற நெருக்கடி அரசுக்கு ஏற்படும்.

இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் வழிகாட்டல்கள் தேவைப்பட்டால் கீழ்க்காணும் வாட்சப் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

9043916878

குறிப்பு:

வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் தங்கள் தாயக முகவரியை குறிப்பிட்டு ஆன்லைன் புகார் அளிக்கலாம். முதல்வரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.

இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச்செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)



No comments