நாகர்கோவில் தவ்ஹீத் பேரவைக்கு காங்கிரஸ் இலக்கிய அணியின் முன்னாள் மாநில தலைவர் நாஞ்சில் ப. இராஜேந்திரன் வருகை!
நாகர்கோவில் தவ்ஹீத் பேரவையின் (NTF) இஸ்லாமிய நூலகத்துக்கு நேற்றைய தினம் 17. 6. 2022 காங்கிரஸ் இலக்கிய அணியின் முன்னாள் மாநில தலைவரும், பத்திரிகையாளருமான பெரியவர் நாஞ்சில் ப. இராஜேந்திரன் வருகை தந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் சிறப்பை பற்றி தனது பத்திரிக்கையில் எழுதுவதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த நல்ல சம்பவங்களை ஆதாரப்பூர்வமாக அறிய விருப்பம் தெரிவித்தார் அதன் அடிப்படையில் அவருக்கு நாம் மார்க்க அறிஞர் பீஜே அவர்கள் எழுதிய சில புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினோம்.
அதை மனமகிழ்வுடன் பெற்றுக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றார். அல்ஹம்துலில்லாஹ்!
No comments